சம்மதம் தெரிவித்த தனுஷ்.? வெளிவந்த புதிய தகவலால் மகிழ்ச்சியில் ரஜினி குடும்பம்..!

Author: Rajesh
11 February 2022, 2:16 pm

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை.

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை கூறி வருகிறார்.
இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே, இருவரும் திருப்பதி கோயிலுக்கு தோஷ நிவர்த்திக்கு சென்றுவிட்டு வந்து மீண்டும் இணைந்து வாழ போகிறார்கள் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், எதுக்கும் பிடிபடாமல் இருந்து வந்த தனுஷ் மனமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கோயிலுக்குச் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இருவரும் விரைவில் அங்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?