நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ரஜினி, அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.
ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், ரஜினியின் 169 வது படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது சன்பிக்சர்ஸ். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதனிடையே ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான் என பேசப்பட்ட பல இயக்குனர்களில் ஒருவர் தான் பால்கி. இவர் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள நிலையில், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தையும் இயக்கியிருந்தார். ஆகவே தனுஷின் மூலம் ரஜினிக்கு கதை சொல்லும் வாய்ப்பை பெற்றவர் தான் பால்கி.
ஆகையால் ரஜினியின் அடுத்த இயக்குனர் பால்கிதான் கூறப்பட்டு வந்த நிலையில், சில காரணங்களால் பால்கி படத்தில் நடிக்க ரஜினிக்கு விருப்பம் இல்லை தெரிகிறது. மேலும் இதற்கு தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனர் என்ற காரணமும் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனுஷ் ஐஸ்வர்யா விவாகாரம் நடந்து வரும் நிலையில் ரஜினியின் நிராகரிப்பு தனுஷிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.