திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்மநபர்.. போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2022, 7:19 pm
புதுச்சேரி : திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரை சிசிவிடியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேத்தாஜி நகரில் வசித்து வருபவர் திமுக பிரமுகர் பிராங்கிளின். இவர் பொதுபணித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் சாலைகள் அமைக்கும் பணியையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை இவரது வீட்டின் வாசலில் மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த பார்த்து போது புகை மூட்டமாக இருந்தது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் வீட்டில் பொருப்பத்பட்டு இருந்த சிசிடியை ஆய்வு செய்த போது வீட்டின் அருகே மர்ம நபர்கள் ஒருவர் கையில் நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்து வீசிவிட்டு சென்றதும் பதிவாகி உள்ளது. மேலும் சிசிடிவி காட்சியை கொண்டு நாட்டு வெடிகுண்டு வீசி தப்பி சென்ற மர்ம நபரை வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.