ஐபிஎல் 2022 மெகா ஏலம்… முதல் வீரராக ரூ.8.25 கோடிக்கு ஏலம் போன தவான்… அஸ்வினுக்கு ரூ.5 கோடி… Live Updates
Author: Babu Lakshmanan12 February 2022, 12:18 pm
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடக்கும் மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் 15வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. நாளை வரை நடக்கும் இந்த ஏலம் 5வது மிகப்பெரிய ஏலமாகும். இந்த ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள் இருக்க வேண்டும், அதிகபட்சமாக 25 வீரர்கள். ஒவ்வொரு அணியிலும் 8 அயல்நாட்டு வீரர்களை ஸ்குவாடில் வைத்திருக்கலாம்.
முதல் நாள் ஏலத்தில் இன்றைய 161 வீரர்கள் மட்டுமே ஏலம் விடப்படுவார்கள். மீதமுள்ள வீரர்கள் நாளை முடுக்கி விடப்பட்ட செயல்முறையில் ஏலம் விடப்படுவார்கள்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் தொடங்கியது
முதல் வீரராக டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தவான் ஏலத்தில் விடப்பட்டார். ஆரம்ப விலையாக அவருக்கு 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் .ரூ.8.25 கோடிக்கு தவானை பஞ்சாப் ஏலத்தில் எடுத்தது.
இதைத் தொடர்ந்து, தமிழக வீரரும், டெல்லி அணியில் கடந்த சீசனில் விளையாடியவருமான அஸ்வின், ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஆஸி., அணியின் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் கடந்த சீசனில் கொல்கத்தா அணியில்தான் விளையாடியவர்
ஐபிஎல் கிரிக்கெட் மெகா ஏலத்தில் ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. இதுவரையில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனவர் இவராவார். இதற்கு முன்னதாக ரபாடா டெல்லி அணியில் இருந்தார்.
மும்பை அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்-டை ரூ. 8 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. இதற்கு முன்னதாக, அவர் மும்பையில் அணியில் விளையாடினார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஸ்ரேயாஷ் ஐயர். தற்போது வரை அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வீரர் இவராவார்.
பஞ்சாப் அணியில் இருந்த முகமது ஷமி ரூ.6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்
சென்னை அணியில் இருந்த டூபிளசிஸ் ரூ.7 கோடிக்கு பெங்களூரூ ராயல் சேலஞ்சர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்
தென்னாப்ரிக்கா அணியின் விக்கெட் கீப்பரான டிகாக் ரூ.6.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்
ஐதராபாத் அணியால் நீக்கப்பட்ட டேவிட் வார்னர் ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்
ஐதராபாத் அணியில் இருந்த மணிஷ் பாண்டே ரூ.4.60 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்
டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஷிம்ரன் ஹெட்மயர் ரூ.8.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்
ஐபிஎல் மெகா ஏலத்தில் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு சென்னை அணி மீண்டும் ஏலத்தில் எடுத்தது
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜெஷன் ராயை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
தென்னாப்ரிக்கா அணியின் பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை
ஐபிஎல் கிரிக்கெட் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க எந்த முன்வரவில்லை
இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.4.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் டிஜே பிராவோ தக்க வைக்கப்பட்டார்
நிதிஷ் ரானாவை ரூ.8 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் தக்க வைத்தது
இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ரூ.10.75 கோடிக்கு பெங்களூரூ அணி மீண்டும் தக்க வைத்து கொண்டது
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் தீபக் ஹுடாவை ரூ. 5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
இலங்கை அணியின் வீரர் ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரூ அணியே தக்க வைத்தது
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ரூ.8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மும்பையில் இருந்து விடுவிக்கப்பட்ட க்ருணால் பாண்டியாவை ரூ.8.25 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஏலத்தில் எடுத்தது
ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ரூ.6.50 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்
ஐபிஎல் மெகா ஏலம் : ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் முகமது நபியை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை
மும்பை இந்தியன்ஸ் ரூ.15.25 கோடிக்கு இளம் இந்திய வீரர் இஷான் கிஷானை ஏலத்தில் எடுத்து மீண்டும் தக்க வைத்தது
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்
விருதிமான் சகா மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை
ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ரூ.5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரூ அணி
தமிழக வீரர் நடராஜனை ரூ.4 கோடிக்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது ஐதராபாத் அணி
நிகோல்ஷ் பூரனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு சென்னை அணி மீண்டும் தக்க வைத்தது
கொல்கத்தா அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
வேகப்பந்து வீச்சாளர் லூக்கி ஃபெர்குசன் ரூ.10 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்
சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் ரூ.7.75 கோடிக்கு பெங்களூரூ அணி ஏலத்தில் எடுத்தது
இங்கிலாந்தைச் சேர்ந்த மார்க் வுட்-டை ரூ. 7.50 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
மீண்டும் ஐதரபாத் அணியில் இடம்பிடித்த புவனேஸ்வர் குமார். ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித், ஆப்கானிஸ்தானின் ஷர்தான், தென்னாப்ரிக்கா வீரர் இம்ரான் தஹீர் ஆகியோரை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை
சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாகூர், ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணியிடம் ஏலம் போனார்
முஷ்தபுஜூர் ரகுமான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை தலா ரூ.2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் எடுத்தது
ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை
ராகுல் சஹாரை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை