வைரலாகும் அஜித்தின் புதிய லுக்… லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..!

Author: Rajesh
12 February 2022, 12:36 pm

அஜித்தின் வலிமை படம் வரும் 24 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக மதுரையில் மட்டும் 45 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் மட்டுமே வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதில் தமிழில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டினர். இந்தி டிரெய்லரை இந்தி சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கனும், தெலுங்கு டிரெய்லரை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவும், கன்னட டிரெய்லரை கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பும் வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்  வலிமை படத்தின் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் புகைப்படங்களை வைரலாக்கி, லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!