வகுப்பறையில் தொழுகை நடத்திய மாணவர்கள்: பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்…கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை..!!

Author: Rajesh
13 February 2022, 9:50 am

மங்களூரு: மாணவ-மாணவிகள் தொழுகையில் ஈடுபட்ட வீடியோ தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா அங்காதர்கா பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு அனைத்து மதத்தை சேர்ந்த மாணவி-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த பள்ளியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து தொழுகை செய்த வீடியோ வைரலானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பொதுமக்கள், பிற மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி வட்டார கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற கல்வித்துறை அதிகாரிகள் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரித்தனர்.

அப்போது கடந்த 4ம் தேதி விளையாட்டு பிரிவு நேரத்தில் முஸ்லிம் மாணவிகள் தொழுகை செய்திருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஏற்க மறுத்த கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நேரத்தில் தொழுகை செய்திருப்பது, அரசு உத்தரவை மீறுவது போன்று அமைந்துள்ளது.

https://twitter.com/erbmjha/status/1492716049598345218

இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை அதிகாரி லோகேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் முஸ்லிம் மாணவிகள் தொழுகை செய்தது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேபோன்று பாகல்கோட்டை மாவட்டம் இலகல் பகுதியில் உள்ள மவுலான ஆசாத் பள்ளியில் 6 முஸ்லிம் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதுபற்றி பாகல்கோட்டை கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?