இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா…? ஆட்சியர் வெளியிட்ட பகீர் தகவல்…!
Author: kavin kumar14 February 2022, 2:47 pm
மதுரை : மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தொடர்பாக இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “இந்திய தேர்தல் ஆணையம் வழியாக வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் 5 பிரிவுகளின் கீழ் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற மார்ச் மாதம்15ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பாட்டுப் போட்டி, காணொளிக் காட்சியை உருவாக்கம், வினாடி வினா என 5 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் அனைத்து வயதை சேர்ந்த மக்களுக்கும் பங்குபெறலாம்.
இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பங்கேற்பாளர்களின் தகவல்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு
அனுப்ப வேண்டும் என கூறிய அவர், இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. சிறப்பு பரிசாக பங்கேற்றவர்கள் 50 பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி முழுவதும் நிறைவடைந்துள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டு வழங்கும் பணி 32 சதவீதம் வரை நிறைவு பெற்று உள்ளது. மீதமுள்ள வாக்காளர்களுக்கும் இன்று வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுவிடும் எனவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 1,615 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் 338 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அதில் 127 வாக்குச்சாவடிகளில் வைவ் ஸ்ட்ரீமிங் செய்யவும், 211 வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமித்தும் கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தற்பொழுது வரை மதுரை மாவட்டத்தில் பறக்கும் படையினர் மூலமாக 6.43 லட்சத்தி 380 ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்றுவரை 8 புகார்கள் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7770 வாக்குப்பதிவு அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் ஊரகப் பகுதிகளை சேர்ந்தவர்கள் தற்போதுவரை 4896 பேர் தபால் வாக்கு படிவம் 15 ஐ பெற்றுள்ளனர். இதில் 552 பேர் மட்டுமே கிராமப்புறங்களில் உள்ளவர்கள். 4344 பேர் தபால் ஓட்டுக்காக விண்ணப்பங்களை கூறியுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த தேர்தல் அதிகாரியின் வழியாக தபால் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.