இதுவரை தமிழ் சினிமாவில் சேராத ஜோடி : 80களின் சூப்பர் ஸ்டாருடன் இணையும் 90ஸ் Famous நடிகை!!
Author: Udayachandran RadhaKrishnan14 February 2022, 5:10 pm
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் கொடிக்கட்டி பறந்தாலும், ஒரு சில நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஏன் ஜோடி சேரவில்லை என்ற வருத்தம் சினிமா பிரியர்கள் இடையே இருக்கும்
அப்படி ஒரு காலத்தில் பாப்புலராக இருந்த நடிகர் நடிகை தற்போது இணைந்து நடிக்க உள்ளனர். அது வேறு யாரும் இல்லை மைக் மோகன் தான். இவர் நடித்த படங்கள் எல்லாம் வெள்ளி விழாதான்.
அப்போதே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வர வேண்டிய மோகன், சில நயவஞ்சகர்களால் எய்ட்ஸ் என்று வதந்தி பரவப்பட்டு மோகனை வீட்டிலேயே உட்கார வைத்து விட்டனர்.
80களில் சினிமாவுக்குள் நுழைந்த அத்தனை நடிகைகளுடன் நடித்த இவர், 90களில் சினிமாவைவிட்டு ஓரங்கட்டப்பட்டார். மீண்டும் சினிமாவுக்கு வர எண்ணி சுட்ட பழம் என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தார்.
ஆனால் அந்த படம் சுத்தமாக ஓடவில்லை. இதனால் மீண்டும் வீட்டிலேயே முடங்கினார். இந்த நிலையில் 90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த குஷ்புவுடன் இணைந்து திரைக்கு வருகிறார்.
இருவரும் இதுவரை ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. இந்த குறையை போக்க ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தில் மோகன் மற்றும் குஷ்பு நடிக்க உள்ளனர். இந்த தகவலை நடிகை குஷ்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தனது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக பெருமைப்படும் குஷ்பு, தெலுங்க மௌன கீதம் (தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே) படம் பார்த்து ரசிகையானதாகவும், இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குநருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.