நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் ‘விறுவிறு’: முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த பஞ்சாப் தமிழரான சுயேட்சை வேட்பாளர்..!!

Author: Rajesh
14 February 2022, 6:08 pm

கோவை: முக கவசம் வழங்கி ,பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்,இந்த தேர்தலில் 71 வது வார்டு பகுதி மக்கள் தனக்கு வெற்றி வாகை சூடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து வருகிறது. பல்வேறு முன்னனி கட்சியினர் விதவிதமாக பிரச்சாரங்கள் செய்து வரும் நிலையில், இதற்கு தானும் சளைத்தவன் அல்ல என நிரூபிக்கும் வகையில் கோவை 71 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஆனந்த் சிங் பிரச்சாரத்தில் அசத்தி வருகிறார்.

அந்த வகையில் 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் அனைத்து பகுதி மக்களாலும் டோனி சிங் என அழைக்கப்படும் இவர் 71 வது வார்டு பகுதியான ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் சிங் என்ற டோனி தனது சின்னமான பெட்ரோமாக்ஸ் விளக்கை கையில் ஏந்தியபடி அவரது ஆதரவாளர்களுடன் ஆர்.எஸ்.புரத்தில் வாக்கு சேகரித்தார்.

அந்த பகுதி மக்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கி வாக்கு சேகரித்த டோனி சிங், இந்த தேர்தலில் 71 வது வார்டு பகுதி மக்கள் தனக்கு வெற்றி வாகை சூடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 731

    0

    0