காதலர் தினத்தில் கல்யாணம் : ஏழு வகை தோலிசை கருவிகள் முழங்க கெட்டிமேளம்

Author: kavin kumar
14 February 2022, 10:54 pm

கோவை: கோவையில் கெட்டிமேள வாத்தியத்திற்கு பதிலாக ஏழு வகை தோலிசை கருவிகள் கொண்டு காதலர் தினத்தில் திருமண வைபோவத்தை நடத்தியுள்ளனர் தம்பதியினர்.

திருமணம் என்றாலே “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற வார்த்தை நமக்கு நியாபகத்துக்கு வரும். கெட்டிமேளம் முளங்க கல்யாணம் நடப்பது என்ற வழக்கத்தை மாற்றி அமைத்துள்ளனர் கோவையை சேர்ந்த தம்பதியினர்.கோவையைச் சேர்ந்த ஆயுதம் அறக்கட்டளையின் நிறுவனர் விவேக் மற்றும் ஸ்ரீ வித்யா ஆகியோரின் திருமணம் நிச்சயக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

காதலர் தினத்தன்று நடைபெறும் இந்த கல்யாணத்தை சிறப்பாகவும், வித்தியாசமான முறையிலும் நடத்த வேண்டும் என்று நினைத்த தம்பதியினர் கெட்டிமேள வாத்தியதிற்கு பதிலாக பறை, தவில், பம்பை, உடுக்கை, உருமி, முரசு, தமரு உட்பட 7 வகையான தோலிசைக் கருவிகள் கொண்டு மாங்கல்ய வாத்தியமாக கொண்டு திருமணத்தை நடத்தியுள்ளனர்.

தவில் நாதஸ்வரம் மட்டுமே கொண்டு நடந்த மாங்கல்ய வாத்தியத்தில் கலை ரீதியாக ஓர் சமூக மாற்றம் கொண்டுவரவும், பறை உள்ளிட்ட இசைக் கருவிகளை மங்கல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என ஓர் புது முயற்சியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. வழக்கமாக கெட்டி மேளம் முழங்க திருமணத்தை பார்த்த மக்கள் வித்யாசமான இசையில் திருமணத்தைப் பார்த்து வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1464

    0

    0