விவசாயிகள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக.. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை : இபிஎஸ் கடும் தாக்கு

Author: Babu Lakshmanan
15 February 2022, 5:48 pm

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை எனவும், விவசாயிகள் மீது அக்கறை இல்லை, விவசாயிகளுக்கு நன்மை செய்யும் என்ற எண்ணம் திமுக இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை ரயில் நிலையத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவை எதிர்த்து வெல்லும் சக்தி திமுகவிற்கு இல்லை என்றும், இந்த தேர்தலை ஒத்திவைக்க திமுக பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

2006 இல் இரண்டு சென்ட் நிலம் தருவதாக கருணாநிதி கூறினார். ஆனால் நிலத்தை காட்டாமலேயே போய்விட்டார். திமுகவைப் பொறுத்தவரையில் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு என்றும், தேர்தலுக்குப்பின் ஒரு பேச்சு என்றும் உள்ளனர். அதிமுக தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், விவசாயத்தை பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுக என்று கூறிய அவர், அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் இரு முறை நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் திமுக நகை கடன் விவகாரத்தில், திமுகவிற்கு ஓட்டுப் போட்டால் 35 லட்சம் பேர் வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த 35 லட்சம் பேரிடம் வட்டி வாங்கி, 13 லட்சம் பேரிடம், நகை கடன் தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். நம் பணத்தை வாங்கி நகை கடன் தள்ளுபடி செய்யும் ஒரே முதலமைச்சர் இந்தியாவில் ஸ்டாலின் மட்டும்தான் என்று குற்றம் சாட்டினார். நாம் கொண்டு வந்த திட்டத்தை, அவர்கள் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். நம் குழந்தைக்கு அவர்கள் பெயர் வைக்கிறார்கள், கொஞ்சுகிறார்.

கல்வி கடன் வழங்குவதாக கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாகவும், டெல்டாவை பொறுத்தவரை இதுவரை நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை, சுமார் 3 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு நெல் கொள்முதல் செய்வதற்கு இதுவரை பணம் வழங்கவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். ஏன் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து விட்டு, பிறகு மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது தானே எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

விவசாயிகள் மீது திமுகவிற்கு அக்கறை இல்லை என்றும், விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லை எனவும் தெரிவித்த அவர், பொங்கல் தொகுப்பில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சிறப்பான பொங்கல் பரிசு வழங்கியதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

  • ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி மாஸ் ஹிட் படம்…அட எப்போங்க..!
  • Views: - 1694

    0

    0