30 நொடியில் மாஸ் காட்டிய அஜித்..! அடாவடியான அடிதடி வீடியோ வெளியிட்ட போனி கபூர்..!

Author: Rajesh
16 February 2022, 12:58 pm

அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ajith - valimai - updatenews360

இந்நிலையில் வலிமை படத்தின் புதிய முன்னோட்டக் காட்சியை அந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த முன்னோட்டத்தில் அஜித் ரெக்கிங் இரும்பு குண்டை கையில் வைத்து என்ட்றி கொடுக்கும் காட்சிகள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது.

மேலும் அடியாட்களை இரும்பு கம்பி மற்றும் இரும்பு குண்டால் கொண்டு அடிக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மேலும், நடிகை ஹூமா குரேஷியும் சண்டை போடும் காட்சியும் முன்னோட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 30 நொடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!