மேயருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் காதல் : ‘கொடி’ பட பாணியில் ரியல் ஜோடி ஆகும் இளம் அரசியல்வாதிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 1:49 pm

கொடி படத்தில் ஜோடியாக வரும் தனுஷ் திரிஷாவை போல ரியலாக மேயரும் எம்எல்ஏவும் காதலித்து திருமணம் செய்யப்போகும் சம்பவம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் கொடி. தனுஷ் திரிஷா நடிப்பில் வெளியான இந்த படம் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் தனுஷ் திரிஷா வேறு வேறு கட்சி பதவியில் இருந்தும் காதல் பறவைகளாக வலம் வருபவர்.

இந்த ரீல் சம்பவம் தற்போது உண்மையாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் மேயராக உள்ளவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரி மாணவியாக இருந்தவரை மேயராக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றவர் ஆர்யா ராஜேந்திரன். இதனால் சுலபமாக பெயர் வாங்கிய ஆர்யாவுக்கு பாலுச்சேரி எம்எல்ஏ சச்சின் தேவுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சச்சின் தேவ், இந்திய மாணவர் சங்கத்தில் மாநில செயலாளராக உள்ளார். எஸ்.எப்.ஐ அமைப்பில் தேசிய இணை செயலாளராக உள்ள சச்சின் தேவும், ஆர்யாவும் இந்திய மாணவர் சங்கத்தில் வளர்ந்தவர்கள்.

இதனால் இவர்களுக்கிடையே நல்ல நட்பு உள்ளது. இருவருக்கும் அந்த அமைப்பின் கொள்கையில் தீராத ஆர்வம். இதனால் கொள்கை ஒத்துப்போனதால் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இவர்களது திருமண முடிவுக்கு சச்சின் தேவின் தந்தை நந்தகுமார் சம்மதம் தெரிவித்து ஊடகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து இந்த திருமண சம்பவம் தற்போது பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 1803

    0

    0