நெருங்கும் தேர்தல்… ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்…

Author: kavin kumar
16 February 2022, 4:27 pm

மதுரை : அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளையுடன் நூதன முறையில் பொதுமக்களிடம் திமுக பெண் வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் சேஷா ஜெயராமன் ஜல்லிக்கட்டு காளையுடன் நூதன முறையில் வார்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1551

    0

    0