பீஸ்ட் படத்தால் விரக்தியில் பூஜா ஹெக்டே..! விஜய் தந்த சர்ப்ரைஸ்..!

Author: Rajesh
16 February 2022, 6:01 pm

இளைய தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் அரேபிக் குத்து பாடல் வெளியாகி இணைத்தை திணறடித்து வருகிறது.

தளபதி விஜயின் படங்களில் அதிகம் நடனத்திற்கும், பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பீஸ்ட் படத்தில் மொத்தமாகவே ஒரே ஒரு பாடல் தான் இருக்கிறதாம். இந்தப் பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு அந்த அளவுக்கு பெர்ஃபாமன்ஸ் கிடையாதாம்.

படத்திலும் விஜய்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் விரக்தியில் உள்ளாராம் பூஜா ஹெக்டே. இதனையடுத்து வருத்தத்துடன் பூஜா ஹெக்டே விஜயிடம் கூறியுள்ளார். இதனால் விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் பூஜா ஹெக்டேக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என வாக்கு கொடுத்துள்ளாராம்.

இந்த நிலையில், விஜய்யின் 66வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக புஷ்பா படத்தின் மூலம் புகழ்பெற்ற ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

மேலும், தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த இரண்டு ஹீரோயின்களும் தளபதி 66 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்படத்தின் மூலம் பூஜா ஹெக்டே ஆசை விஜய் நிறைவேற்றுகிறாரா என்பதை பார்ப்போம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1641

    6

    4