தமிழகத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!! பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

Author: kavin kumar
16 February 2022, 7:58 pm

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும் மற்றும் கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை அந்த வகையில் வாக்குப்பதிவு நடைபெறும்.மேலும் வாக்குச்சாவடிகள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய நாள் ( பிப்.18 ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித் துறைவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.மேலும் தெரிவித்து இருப்பதாவது: பிப்.,18 ம் தேதி தேர்தல் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயங்கும் எனவும், அதே நேரத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தால் அந்த பள்ளிகளுக்கு பிப்.,18-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!