குடிபோதை தகராறில் பூக்கடை ஊழியர் கொலை : குற்றவாளிக்கு வலை வீசும் போலீசார்..!!

Author: kavin kumar
17 February 2022, 1:51 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பூக்கடை ஊழியரை கொலை செய்து தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள குபேர் அங்காடி வளாகத்தினுள் பூக்கடைகள் அமைந்துள்ளது. இதனிடையே பூக்கடை ஒன்றில் காரைக்காலை சேர்ந்த அருளானந்தம் (38) என்பவர் கடையிலேயே தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அருளானந்தம் மற்றும் அருகில் உள்ள பூக்கடைகளில் வேலை செய்யும் 2 நபர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது உச்சகட்ட மதுபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருளானந்தத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து 2 நபர்களும் தப்பியோடினார்.

மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த செக்யூரிட்டி கொலை சம்பவம் தொடர்பாக பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?