செய்ததை சுட்டிக்காட்டி பத்திரத்தில் கையழுத்திட்டு வாக்கு சேகரிப்பு : நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வித்தியாசமான முயற்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 2:38 pm

விழுப்புரம் : நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் அனைத்து வீடுகளுக்கும் சென்று வித்தியாசமான முறையில் உறுதிமொழிப் பத்திரத்தை கொடுத்து வாக்கு சேகரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது இதனையொட்டி இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 41வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் என்பவர் இதுவரை அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்து அந்தப் பகுதிக்கு செய்த காரியங்களை படத்துடன் புத்தகம் வெளியிட்டு அதனை வாக்காளர் வீடுகளுக்குச் சென்று கொடுப்பதுடன் 20 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி உடன் கையொப்பமிட்டு கொடுத்து வருகின்றார்.

இதுவரை ஒவ்வொரு வேட்பாளரும் இனிமேல் செய்யப்போகும் காரியங்களை செய்வதாக கூறி மட்டுமே வாக்குகள் கேட்பார்கள். ஆனால் வித்தியாசமான முறையில் செய்ததை சுட்டிக்காட்டியும் இனிமேல் செய்யப் போவதையும் புத்தகமாக வெளியிட்டு உறுதிமொழி பத்திரத்துடன் வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?