ஆஹா… என்ன சுவை…ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி… ஒரு முறை செய்து பாருங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
17 February 2022, 2:49 pm

தக்காளி தொக்கு, தக்காளி குழம்பு, தக்காளி பச்சடி என தக்காளியை வைத்து பல விதமான உணவுகளை சமைக்கலாம். பெரும்பாலான இந்திய உணவுகள் தக்காளி இல்லாமல் இருக்காது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஆந்திர மாநில ஸ்பெஷல் தக்காளி தொக்கு. இது சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்திற்கும் அருமையாக இருக்கும். இப்போது இதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி- 4
வெங்காயம்-1
எண்ணெய்- 2 தேக்கரண்டி
இஞ்சி- ஒரு துண்டு
பூண்டு- 4
வர மல்லி- ஒரு தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
பெருங்காயம்
புளி- எலுமிச்சை பழம் அளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
வர மிளகாய்- 8
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வர மல்லி, வர மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

*இதனை தனியாக ஆற வைக்கவும்.

*இப்போது அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

*கடாயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து தக்காளி, உப்பு மற்றும் சேர்த்து நன்கு வதக்கவும்.

*ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகாய் கலவையோடு வதக்கி வைத்த தக்காளி சேர்த்து அரைக்கவும்.

*இதனோடு வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டையும் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டவும்.

*அவ்வளவு தான்… ருசியான ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி ரெடி

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!