“ஹல மிதி ஹபி போ…. ” பீஸ்ட் பாடல் போல் ஜோனிடா காந்தியின் பீஸ்ட் கவர்ச்சி!! ரசிகர்களுக்கு ரிசென்ட் crush ஆன ஜோனிடா !!!

Author: kavin kumar
17 February 2022, 3:59 pm

ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் .

தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி. தற்போது பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து “அரபி குத்து ” பாடலை பாடி உலகளவில் உள்ள தமிழ் மக்கள் பார்வையில் விழுந்துள்ளார் .
அரபி குத்து பாடல் வெளியாகி பல சாதனைகளை உருவாக்கி வருகிறது .இன்றுவரை அரபி குத்து பாடல் தான் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்.

அருவி குத்து பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவை விட ஜோனிடா காந்தி ரொம்பவும் அழகாக இருக்கிறார் . பேசாம பீஸ்ட் படத்தில் ஜோனிடா காந்தியையே ஹீரோயினாக்கி இருக்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் மீம்ஸ் ஷேர் செய்து வந்தனர். இத்தனை நாட்கள் பாடகியாவே வலம் வந்த இவர், தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

பாடகியாக இருக்கும் போதே கிளாமர் உடைகளை அணிந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பாடலுக்கு மட்டுமல்லாமல், தனது கவர்ச்சிக்கும் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்தார். தற்போது, கதாநாயகியாக அவதாரம் எடுத்த ஜொனிடா காந்தி, கவர்ச்சியிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

பாடகி ஜோனிடா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகின்றனர் . ஜோனிடா காந்தியின் அழகின் மயங்கிய ரசிகர்கள் ஜோனிடாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…