கொடுமையிலும் கொடுமை… பசு மாட்டை பலாத்காரம் செய்த கொடூரன்கள்… வீடியோவை வைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!!
Author: Babu Lakshmanan17 February 2022, 4:20 pm
ராஜஸ்தான் : பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்விநிலையம், தொழில்நிறுவனங்களில் என பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுவது வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் காமக் கொடூரன்களால் கால்நடைகளும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்வார் மாவட்டத்தில் சுஹாத்பூர் பகுதியில் பசு மாடு ஒன்றுடன் 4 இளைஞர்கள் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் சம்பந்தப்பட்டவர்களை தேடியுள்ளனர். அதில், சுபைர் மற்றும் சுனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் மற்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறையாக உள்ள வாரீஸ், தலீம் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
வாயில்லா ஜீவனான பசு மாட்டை வன்புணர்வுக்கு ஆளாக்கிய சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.