விஜய்யுடன் ரொமான்டிக் செய்ய விருப்பம் தெரிவித்த மாளவிகா மோகனன்..!
Author: Rajesh17 February 2022, 6:25 pm
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்தப்படம் விரைவில் ஓடிடியில் வெளி வர இருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சமீபத்தில் ரசிகர்கள் உடன் ட்விட்டரில் உரையாடிள்ளார். அப்போது விஜய் பற்றி சொல்லுங்க என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு அவர், ‘விஜய் சமீப காலமாக ரொமான்டிக் படங்களில் நடிப்பதில்லை, அவர் அதுபோல ஒரு படம் நடிக்க வேண்டும், அதில் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என மாளவிகா தெரிவித்துள்ளார்.