ஆம்புலன்சை ஆட்டையை போட்ட திருடன் : டாட்டா காட்டி சென்ற போது அரசு பேருந்து மீது மோதியதில் காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 6:32 pm

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 அவசர ஊர்தியை திருடிச்சென்ற நபர் அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தி சிக்கியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை இறக்கிவிட்ட 108 அவசர ஊர்தியை இன்று திடீரென திருடிச்சென்றார். இதனைத்தொடர்ந்து அவசர ஊர்தியை பொதுமக்கள் துரத்திச்சென்றனர்.

அப்போது லங்கா கார்னர் பாலம் தாண்டி ராயல் தியேட்டர் சிக்னல் அருகே அரசு பேருந்து மற்றும் காரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை துரத்தி வந்தவர்கள் அவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிடிபட்ட நபர் மது போதையில் இருந்துள்ளார். மேலும் காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அவர் மன நிலை பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் , பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!