அரசு பேருந்து மீது உரசிய ஷேர் ஆட்டோ : ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் படுகாயம் !! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!

Author: kavin kumar
18 February 2022, 1:41 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு பேருந்து ஷேர் ஆட்டோவை உரசியதில் ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் படுகாயம் அடைந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

புதுச்சேரி கடலூர் எல்லையில் இருந்து புதுச்சேரி நகர பகுதிக்கு செல்லும் வழியில் நடுவே உள்ள தமிழக பகுதியான ரெட்டிச்சாவடிக்கு ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று கடலூரில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கன்னியக்கோவில் வழியாக ரெட்டிசாவடிக்கு செல்லும் போது அரசு பேருந்து ஒன்று ஷேர் ஆட்டோவை உரசியதை அடுத்து ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து சாலை ஓரத்தில் விழுந்தது. இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சாலையில் விழுந்தனர்.

இந்த விபத்தில் 8 மாத கர்ப்பிணி, குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்தனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் அரசு பேருந்து ஒன்று ஷேர் ஆட்டோவை முந்தி செல்லும் போது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?