தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை.

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை கூறி வருகிறார். இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனால் குடும்பத்தில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்த நடிகர் ரஜினி, தனது கவனத்தை திருப்பும் வகையில் படங்களுக்காக கதைகளை கேட்டு வந்தார். இதனையடுத்து, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூறிய கதை பிடித்துப்போக தலைவர் 169 படத்தில் கமிட் ஆகியுள்ளார் ரஜினிகாந்த். இதற்கான அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு ரஜினி 170 படத்திற்கும் ஓகே சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த படத்தை பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்துக்கு பால்கி கதை கூற தனுஷ்தான் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. தனுஷ் சிபாரிசு செய்த இயக்குநரின் கதையை கேட்டு ரஜினி ஓகே சொல்லியிருப்பது, அவர்களுக்கு இடையிலான மனவருத்தம் நீங்கி வருவதை வெளிப்படுத்துவதாக தெரிகிறது.
இதனால் விரைவில் நடிகர் ரஜினிகாந்த் எதிர்பார்த்தப்படி தனது மகளின் வாழ்க்கை மீண்டும் பழையப்படி சீராகும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தற்போது வாத்தி மற்றும் நானே வருவேன் படங்களில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.