மெழுகு சிலை.. டக்கரா மாறி இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சதா– வைரல் போட்டோஸ்..!

Author: Rajesh
18 February 2022, 5:45 pm

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சதா தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த சதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் தான்.

அந்நியன் படத்தில் நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு பல விருதுகளை வென்றார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது வரை சினிமாவில் நடித்து வந்தாலும் முன்னர் இருந்தது போல் மார்க்கெட் இல்லை. கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மாறிப்போன புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!