வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி பாஜக புகார் மனு…

Author: kavin kumar
18 February 2022, 6:36 pm

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், அதேபோல் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குமாரவேல் பாண்டியனிடம், பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயனி மற்றும் பாஜக நிர்வாகிகள் புகார் மனுவை அளித்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட குமாரவேல் பாண்டியன், உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகாயினி பேசுகையில், “வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ,
35 வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பல்வேறு விதங்களில் அச்சுறுத்தி வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஹோட்டல்களில் குற்றப்பின்னணி உள்ளவர்களும் தங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.எனவே அது போன்ற நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

அனைத்து பூத்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு மையங்களை கண்காணிக்க வேண்டும் எனவும், தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் எந்த ஒரு தனிநபரும் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான குமரவேல் பாண்டியனிடம் புகார்களை தெரிவித்து இருப்பதாக அவர் கூறினார். புகார் அளிக்கும்போது பாஜக மாவட்ட தலைவர் தசரதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?