வீல் சேரில் வந்து வாக்களித்த 95 வயது முதியவர்: ஜனநாயக கடமையாற்றியதாக மகிழ்ச்சி..!!

Author: Rajesh
19 February 2022, 9:20 am

கோவை : கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் நடக்க முடியாத சூழலிலும், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து, அதிகாரிகள் வழங்கிய வீல் சேரில் சென்று வாக்களித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்த மக்கள் பலரும் இன்று அதிகாலை முதலே வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே கோவையைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் நடக்கவே முடியாத சூழலிலும் சிரமப்பட்டு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. 95 வயது முதியவரான இவர் வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து தனது கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த முதியவர் இன்று காலையிலேயே நல்லாம்பாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார்.

நடக்கவே முடியாமல் வந்த அவருக்கு அதிகாரிகள் வீல் சேர் வழங்கினர். தொடர்ந்து அவர் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பினார்
வாக்களித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கும் சில இளைஞர்கள் மத்தியில் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற முனைப்போடு வந்து வாக்குப்பதிவு செய்த முதியவரை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1383

    0

    0