கோவைக்கு துணை ராணுவ பாதுகாப்பு தேவையா..? வாக்களித்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

Author: Babu Lakshmanan
19 February 2022, 10:16 am

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலமான நடிகர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

சென்னை மாவட்டம் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வருகை தந்தார். அங்கு மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- துணை ராணுவ பாதுகாப்பு தேவைப்படும் அளவிற்கு கோவையில் எந்த சம்பவமும் நடக்கவில்லை.
தர்ணா என்ற பெயரில் அதிமுகவினர் நாடகம் அரங்கேற்றியுள்ளனர். நகைக்கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் மோசடி செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும், எனக் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி