கோவையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்: ஜனநாயக கடமையாற்றிய அதிமுக வேட்பாளர்..!!

Author: Rajesh
19 February 2022, 12:03 pm

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சிகளில் 100 வார்டுகளும், 7 நகராட்சிகளில் 198 வார்டுகளும் மற்றும் 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளும் உள்ளன.

தேர்தலை நடத்தும் பொருட்டு மாநகராட்சியில் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 15 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 1290 வாக்குச் சாவடிகளும், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 2312 வாக்குச் சாவடிகளுடன் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளுக்காக 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன்னர்.

வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து செல்கின்றனர். இந்நிலையில், 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் வடவள்ளி மகாராணி அவன்யூ நடுநிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்