வலிமை பட வில்லனுடன் நடிகை செய்த வேலையை பாருங்க : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2022, 12:08 pm
அஜித் ரசிகர்கள் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக காத்திருந்த வலிமை திரைப்படம் வரும் 24ம் தேதி உலகம் முழுவமுதும் வெளியாக உள்ளது. வலிமை அப்டேட் கேட்டு கேட்டு கடைசியில் படம் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம், கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டதால் படம் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்த நிலையில் படம் ரிலீசுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள், வரும் 24ம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளனர். ஹெச். வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள், பிஜிஎம் என எல்லாமே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
இந்த நிலையில் வலிமை படத்தின் நாயகியாக நடித்துள்ள ஹூமாம குரேஷி, படத்தின் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயாவுடன் சூப்பரான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.