இப்படி ஒரு இடத்துல இருந்து வந்தவரா.? வலிமை பட நடிகை ஓபன் டாக்..!
Author: Rajesh20 February 2022, 12:58 pm
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து வரும் பிரபல திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பிப்ரவரி 24-ஆம் தேதி, 4 மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஹூமா குரேஷி பற்றி சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்து மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துள்ளார்கள். அவரது கடின உழைப்பின் மூலமே இந்தளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது தந்தை ரெஸ்டாரண்ட் வியாபாரம் செய்துள்ளார். நடிகையாக வேண்டும் என்பது எனக்கெல்லாம் ஒரு கனவாக இருந்ததுள்ளது அந்த கனவு இன்று நிறைவேறியுள்ளது..