வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு…! போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!

Author: kavin kumar
20 February 2022, 1:58 pm

தருமபுரி : தருமபுரியில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் பதிவான மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் நேற்று மாலை சீல் வைக்கபட்டு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து அந்த மையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் என 110 காவல் துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மின்னனு இயந்திரங்கள் வைக்கபட்டுள்ள அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திர காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெரும் கல்லூரி வளாகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு தனி அறையில் கண்காணிக்கபட்டு வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி