மணிப்பூர் தேர்தல் களத்தில் அசத்தும் ரியல் ‘விஐபி’…எந்த சொத்தும் இல்லாத ஒரே வேட்பாளர்: யார் இந்த நிங்தௌஜம் போபிலால் சிங்..!!

Author: Rajesh
21 February 2022, 3:13 pm

இம்பால்: எந்த சொத்தும் இல்லாத பட்டதாரி இளைஞர் ஒருவர் மணிப்பூர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.

மணிப்பூரில் முதல்கட்ட தேர்தலில் போடிட்யிடும் 173 வேட்பாளர்களில் 91 பேர் கோடீஸ்வரர்கள். மற்றவர்களுக்கு ஓரளவு சொத்து இருக்கிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதி செம்க்மாய். இந்த தொகுதியில் நிங்தௌஜம் போபிலால் சிங் போட்டியிடுகிறார்.

இவருக்கு அப்பகுதி மக்கள் பிரசாரத்துக்கு பண உதவி செய்து உதவி வருகின்றனர். இதையடுத்து நிங்தெளஜம் சிங் தன்னுடைய தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் நிங்தெளஜம் சிங்குக்கு எந்த சொத்தும் இல்லை. தான் ஒரு வேலை இல்லா பட்டதாரி இளைஞர் எனவும், தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து, அந்த வருவாயில் குடும்பம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இவருக்கு உள்ளூர் மக்கள் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்துவருகிறார்கள். ‘அவர் சமூகத்திற்காக நிறைய விஷயங்களைச் செய்யும் இளைஞர். வருங்கால சந்ததியினருக்கான அவரது உழைத்து வருகிறார். அவரது பிரசாரமும் அப்படித்தான் இருக்கிறது. அவரது பிரசாரம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது, அதனால்தான் நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு வரும் 28ம் தேதியும் மார்ச் 5ம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1386

    0

    0