கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா : 50 தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி

Author: kavin kumar
21 February 2022, 10:28 pm

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

கச்சத்தீவு திருவிழா என்பது தமிழகம் மற்றும் ஈழத்தமிழர்கள் இடையிலான கலாச்சார திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா மார்ச் 12, 13 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.இந்த நிலையில், ஏற்கனவே இலங்கை அரசு அந்நாட்டை சேர்ந்த 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளித்திருந்தது.

இந்த நிலையில் தமிழக பக்தர்கள் 50 பேர் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கச்சத்தீவு திருவிழா பக்தர்களின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா, இலங்கையை சேர்ந்த தலா 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Lokesh Kanagaraj Kaithi 2 Updates சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!
  • Views: - 1414

    1

    0