விமான நிலையத்தில் ரூபாய் 12லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் : பயணியிடம் அதிகாரிகள் விசாரணை…

Author: kavin kumar
22 February 2022, 9:01 pm

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் உடமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமையை ஸ்கேனர் மிஷின் உதவியுடன் சோதனை செய்த போது அவரது சூட்கேஷில் பீடிங் பகுதியில் உருளை வடிவில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சூட்கேசில் உள்ள பீடிங்கை பிரித்து பார்த்த போது அதில் உருளை வடிவில் சுமார் 250கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்தது பயணியிடம் யாருக்காக தங்கம் கொண்டு வரப்பட்டது. தங்க கடத்தலில் ஈடுபடுபவரா அல்லது பணத்திற்காக கொண்டு வந்தாரா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 12 லட்சத்து 84 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1495

    0

    0