ஒத்த ஓட்டை கூட வாங்க முடியாமல் தடுமாறிய பா.ம.க, நா.த.க.!! இதுக்கு பாஜகவே பரவாயில்ல.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
23 February 2022, 12:55 pm

மினி சட்டமன்ற தேர்தலாக கருதப்படும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இது திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த கொங்கு மண்டலமும் திமுக வசம் வந்துள்ளது. கொங்கு மண்டலத்தை கைப்பற்றியதை திமுக பெரும் சாதனையாகவே கருதுகிறது.

இந்தத் தேர்தலில் பாமக, நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிகளுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் 6 வார்டுகளில் போட்டியிட்ட பாமக வெறும் 43 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டியில் பாமக வேட்பாளர் சதாசிவம் ஒரேயொரு ஓட்டு கூட பெறாமல் தோல்வியடைந்துள்ளார். இந்த பஞ்சாயத்தில் உள்ள 15 வார்டுகளில், பாமக 6 வார்டுகளில் போட்டியிட்டு 4 வார்டுகளில் ஒற்றை இலக்க எண் ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. ஒரு வார்டில் 31 ஓட்டுகளை மட்டும் பெற்றது, 3வது வார்டில் பூஜ்ஜியம் ஓட்டுகள் என மொத்தம் 43 வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனால் போட்டியிட்ட 6 வார்டுகளிலும் பாமக டெபாசிட் இழந்துள்ளது.

வன்னியர் சமூகம் அதிகம் உள்ள மாவட்டத்திலேயே பாமகவுக்கு இந்த நிலைமையா..? என்று அந்தக் கட்சியினர் தூக்கமின்றி புலம்பி வருகின்றனர்.

இதேபோல, தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய கட்சி நாங்கள் தான், மக்களிடம் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது எனக் கூறி வந்த நாம் தமிழர் கட்சியும் பெரும்பாலான இடங்களில் ஒற்றை இலக்கு வாக்குகளைகூட தாண்டவில்லை. பேரையூர் பேரூராட்சி 14 வார்டில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய தமிழ்ச்செல்வன் தன் போட்டியிட்ட வார்டில் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதன்மூலம், அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறதா..? என்று கேள்வியை எழச் செய்துள்ளது. அதிலும், முதுகுளத்தூரில் ஒரே ஒரு ஓட்டு கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளது.

அரசியல் கட்சிகளைக் காட்டிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பரீட்சையமான, மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்த வேட்பாளர்கள்தான் வெற்றியை தீர்மானிப்பார்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல, வேட்பாளர்களை தேர்வு செய்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்…!

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1339

    0

    0