பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி – புதிய லுக்கில் சிம்பு புகைப்படம் வைரல்..

Author: Rajesh
23 February 2022, 1:54 pm

பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதனால் கால்ஷீட் பிரச்சனையால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வதாக கடந்த   கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என பெரிய கேள்வி எழுந்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பான போது கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வார நிகழ்ச்சியை நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார் என்ற செய்தி இணையத்தில் வெளியானது. ஆனால் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு எடுக்கபட்ட சிம்புவின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!