நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவு : விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி…

Author: kavin kumar
23 February 2022, 7:26 pm

தூத்துக்குடி : விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்த விரக்தியில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தேர்வுநிலை பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ராமஜெயம் தான் போட்டியிட்ட வார்டில் அதிகப்படியான வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவரது வார்டில் 5 வாக்குகள் பெற்றதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் விரக்தியில் இருந்த ராமஜெயம் வீட்டிற்கு வந்து யாரிடமும் பேசாமல் இருந்தது வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அமமுக வேட்பாளர் ராமஜெயம், தேர்தலில் படுதோல்வியடைந்த விரக்தியில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து தற்கொலைக்கு முயன்ற ராமஜெயத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • GV Prakash latest interview நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!