கார் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து… வெளியான நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சி..!

Author: kavin kumar
23 February 2022, 10:43 pm

திண்டுக்கல் : பழனியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பழனி புறநகர் சாலையில் சென்ற போது முன்னால் சென்ற காரின் மீது இருசக்கர வாகனம் அதி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே வைரமுத்து பலியானார்.

அவரது நண்பர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வலது புறமாக திரும்பும் காரின் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்து மோதும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளன.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?