செம Smart-ஆ இருக்காருப்பா சிம்பு..! பிக்பாஸில் கெத்தாக என்ட்ரி கொடுத்த சிம்பு .. வீடியோ வைரல்..!

Author: Rajesh
24 February 2022, 1:44 pm

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கினார். அதுமட்டுமின்றி தற்போது நடந்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

இதனிடையே கடந்த வாரம் கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் அறிவித்தார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக பிரத்யேகமான புரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் கோர்ட் சூட் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் சிம்பு சோபாவில் கெத்தாக அமர்ந்தபடி இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் ‘எதிர்பாக்கலேல… நானே எதிர்பாக்கல… பாக்கலாமா’ என சிரித்தபடி பேசுகிறார். இந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1655

    22

    0