‘உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துங்க’: ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

Author: Rajesh
25 February 2022, 10:24 am

உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிடம் போரை நிறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி சொல்ல வேண்டும் என்று டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் மூலம் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்றுகொள்ளும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி இன்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி புதினிடம் அவர் வலியுறுத்தினார். அத்துடன் இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் நேர்மையான முறையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா -ரஷ்யா இடையேயான நீண்ட காலமாக நல்லுறவை கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரும்படியும் புதினிடம் மோடி கேட்டு கொண்டுள்ளார்.

உக்ரைன் -ரஷியா இடையேயான போரில் நடுநிலைமை வகிப்பதாக இந்தியா தெரிவித்திருந்துள்ள நிலையில், போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்ய அதிபரை, பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளது சர்வதேச அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!