உக்ரைனில் இந்திய தூதரகம் செயல்படுமா? : அடைக்கலம் புகுந்த மாணவர்களிடம் பேசிய அதிகாரி..!!
Author: Rajesh25 February 2022, 12:42 pm
கோவை: உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அந்த நாட்டின் கீவ் நகரில் உள்ள பள்ளி ஒன்றி அடைக்கலம் புகுந்த மாணவர்களை இந்திய தூதகர் சந்தித்து பேசினார்.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள சூழலில் அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து பெரும்பாலும் மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்கின்றனர்.
தற்போது உக்ரைனில் ஆங்காங்கே ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், அங்குள்ள இந்திய மாணவர்கள் உக்ரைனின் கீவ் நகரில் உள்ள பள்ளியில் அடைக்கலம் புகுந்துள்ளனர். சுமார் 200 இந்திய மாணவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சூழலில் உக்ரைனுக்கான இந்திய தூதர அதிகாரி மாணவர்களை சந்தித்து பேசினார்.
மாணவர்களிடையே அவர் பேசுகையில், “உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இங்கிருந்து துரிதமாக எடுத்து வருகிறோம். வான்வழிப் போக்குவரத்து தரைவழிப் போக்குவரத்து என அனைத்து வழித்தடங்களும் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் தூதரகம் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகள் வாயிலாக அனைவரும் விரைவில் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அனைத்து இந்தியர்களும் தாயகம் திரும்பும் வரை இந்த தூதரகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.” என்றார்.
தூதரக அதிகாரியின் இந்த பேச்சால் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.