நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Author: kavin kumar
25 February 2022, 5:50 pm

கோவை : வடவள்ளி அருகே நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த, வீரகேரளம் பகுதியிலுள்ள, கேஆர் கே நகரில் பல்வேறு குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள நாய்களுக்கு அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் பலரும், உணவு அளித்து வருகிறார்கள், குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளதால், இரவு நேரங்களில் இங்கு, வெளியாட்கள் வருவதை கண்டு நாய்கள் குறைப்பது உண்டு, இதனால் இந்த பகுதிகளில் வெளியாட்கள் இரவு நேரங்களில் வர தயங்குகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கின்ற, வெள்ளிங்கிரி என்பவரது மகன் பாலு என்பவர், வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று அந்த பகுதியில் குட்டிகள் போட்டிருந்த ஒரு நாயை கொடூரமாக கட்டையால் தாக்கி கொன்று அந்தப் பகுதி வீதிகளில் தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளார். இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பு வாசிகளும், மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். மேலும், இது போன்ற கொடூர குணம் படைத்த மனிதர்களும் இங்கு வசிப்பதை கண்டு மனம் வேதனை அடைந்துள்ளனர். இதனை அந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் இன்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த கொடூர செயலை செய்த பாலு என்பவருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், அந்த பகுதிமக்கள் சமூக வலைதளங்களில் கூறிப்பிட்டுள்ளனர். நாய்களால் நமக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் அதனை முறையாக காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டுமே தவிர, இதுபோன்று செயலை யாரும் செய்யக்கூடாது என்று தற்போது விலங்குகள் நல ஆர்வலர்களும் இந்த செயலை கையில் எடுத்து போராட ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1349

    0

    0