அரசு பள்ளி மதிய உணவில் அழுகிய முட்டையா…? 25 மாணவர்களுக்கு மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம்…

Author: kavin kumar
25 February 2022, 9:54 pm

கடலூர் : சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 பள்ளி மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதையடுத்து மாணவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பள்ளி மாணவர்கள் மயக்கம் அடைந்தது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மதிய உணவு சாப்பிடும் பொழுது அவர்களுக்கு அளித்த முட்டை காலாவதியாகி அழுகிப் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மத்தியில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1445

    0

    0