கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம்: மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்..!!

Author: Rajesh
27 February 2022, 10:11 am

கோவை: கோவை ப்ரூக் பாண்ட் சாலையில், உள்ள சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இன்று துவக்கி வைத்தார்.

கோவை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று, 32 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், 24 துணை சுகாதார நிலையங்களிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவமனைகளிலும், 50 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும், 137 அங்கன்வாடிகள் மற்றும் மண்டபங்களிலும், 10 மொபைல் முகாம்களிலும், 11 இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், அமைக்க பட்டுள்ள டிரான்ஸிட் முகாம்கள் மற்றும் 80 பிற இடங்கள் என மொத்தமாக மாநகர் முழுவதும் 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இன்று நடைபெறுகின்றது.

போலியோ செட்டு மருந்து முகாம்களில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போலியோ சொட்டு மருந்து தினமான இன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்கும்படி குழந்தைகளின் பெற்றோர்களை மாநகராட்சி ஆணையர், ராஜ கோபால் சுன்கரா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோவை சிதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் முகாமில் தாய்மார்கள் கலந்து கொண்டு தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 1394

    0

    0