பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக்: ரஷ்யர்களுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் ஆதரவளியுங்கள் என ட்வீட்…!!
Author: Rajesh27 February 2022, 11:24 am
புதுடெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக செய்துள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது. அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து ரஷ்யாவுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. சற்று நேரத்தில் வெளியான மற்றொரு ட்வீட் பதிவில், எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை.
அனைத்து நிதி உதவிகளும் உக்ரைன் அரசுக்கு நேரடியாக செல்லும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. நெட்டிசன்களை குழப்பும் வகையில் அடுத்தடுத்து ட்விட் வெளியானது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
எனினும், சிறிது நேரத்தில் மீட்கப்பட்ட ஜெ.பி.நட்டாவின் கணக்கு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டது. ஹேக்கர்களால் பதிவு செய்யப்பட்ட அனைத்து ட்விட்களும் நீக்கப்பட்டன.