`இந்த டிரெஸ் போட்டுட்டு வரக்கூடாது’ : புதுச்சேரி போலீசார் பேச்சால் புது சர்ச்சை…!
Author: kavin kumar27 February 2022, 6:58 pm
புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த வெளி மாநில பெண்களிடம் அவர்கள் அணிந்துவந்த ஆடை குறித்து போலீசார் பேசும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி கடற்கரை சாலை எதிரே உள்ளது பிராஃன்சுவா மார்ட்டின் விதி இங்கு அரபிந்தோ ஆசிரமத்திற்கு சொந்தமாக பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்நிலையில் இங்கு ஹைதராபாத்யில் இருந்து சுற்றுலா வந்த மென்பொருள் நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பெண்கள் பள்ளி வளாகத்தின் மதில் சுவர் அருகே நின்று புகைப்பட்டம் எடுத்துள்ளனர். இதனை பார்த்த பள்ளியின் ஊழியர் மாணவர்கள் வரும் நேரம் என்பதால் அவர்களை அங்கு இருந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.
ஆனால் அவர்களோ அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து புகைப்படம் எடுத்து வந்ததுள்ளனர். அப்போது அவ்வழியே ரோந்து வந்த பெரியகடை காவலர்கள் திருமுருகேசன் மற்றும் ராவியிடம் பள்ளி ஊழியர் சென்று ஆபாச ஆடை அணிந்து வந்த பெண்களை அங்கிருந்து அனுப்ப கோரி கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் இருவரும் அந்த பெண்களை இது தனியாருக்கு சொந்தமான பள்ளி இடம் மேலும் இது பள்ளி விடும் நேரம் என்பதால் அங்கிருந்து கிளம்பும் மாறு கூறியுள்ளனர்.
ஆனால் ஆபாச ஆடை அணிந்து வந்த அப்பெண்களோ காவலர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் புதுச்சேரி காவலர்கள் தங்கள் ஆடை குறித்து அறிவுறுத்தியதாக பதிவிட்டதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.மேலும் அவர்கள் வெளியீட்டுள்ள வீடியோவில் காவலர்கள் ஆடை குறித்து ஏதும் பேசியது பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.