தேர்தலில் திமுக பெற்றது கொள்முதல் வெற்றி : அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 6:50 pm

திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது கொள்முதல் வெற்றி என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பொய் பேசுவதற்கு திமுகவினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் எனவும் எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்கும் ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி.

அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அடிமட்ட தொண்டர்கள் வரை பொய் வழக்குகள் போட்டு பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ரைடு என்ற பெயரில் ஏவிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கு என்று வழக்கு மட்டுமே போடப்படுகிறது. நுணுக்கமாக கவனிக்கப்பட வேண்டும் முறைகேடு என்று வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

ஆட்சியின் நிர்வாகத்தில் நிர்வாக ரீதியாக தவறு செய்திருந்தால் அதை எதுவுமே அவர்களால் சொல்ல முடியவில்லை நிரூபிக்கவும் முடியவில்லை சொத்துக்குவிப்பு வழக்கு என்று மட்டுமே கூறப்படுகிறார்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் நாங்கள்தான் கொண்டு வந்தோம் காவிரி குடிநீர் திட்டம் முதல் மருத்துவக் கல்லூரி வரை அனைத்து விஷயங்களையும் பொய் சொல்லி வருகிறார்கள்.

தனக்கு அதிகாரமே இல்லாத ஒரு பிரச்சனையில் மத்திய அரசாங்கமே முடிவெடுக்கும் ஒரு பிரச்சனையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள் அனைத்து பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளார்கள்.

வெட்கம் இல்லாமல் ரோசம் இல்லாமல் மானம் மரியாதை இல்லாமல் இது எல்லாம் சொன்னதைச் செய்யாமல் ஏமாற்றி விட்டோமே என்ற செய்வதற்கு உண்டான வழிகளைத் தேடாமல் அமைச்சர்கள் முதல் அடி தொண்டை வரை பொய் வழக்கு போட்டு வருகிறார்கள்.

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொள்முதல் செய்து வெற்றிபெற்றுள்ள ஆட்சி என ஆவேசமாக பேசினார் இதில் முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்ட அதிமுகவின் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஒன்றியம் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…