முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரம் : அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Author: kavin kumar28 February 2022, 6:51 pm
தருமபுரி : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்து தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினர் பல்வேறு வழக்குகளில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தற்போது தமிழகத்தை ஆளும் திமுக அரசு அதிமுகவினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகினறனர். அதே போல தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யான வழக்குகள். அதிமுக தலைமை கழகம் இதுபோன்ற பொய் வழக்குகளை சந்திக்க தயாராக உள்ளது. இனி வரும் காலங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் போட்டால் மிக பெரிய போராட்டம் நடைபெரும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், கோவிந்தசாமி, சம்பத்குமார் உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.